×

ஜூலை 17ல் ‘அர்ஜூனன் பேர் பத்து’ ரிலீஸ்

யோகி பாபு நடிக்கும் 300வது படம், ‘அர்ஜூனன் பேர் பத்து’. தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி.எஸ், தங்கப்பாண்டி.டி இணைந்து தயாரித்துள்ளனர். யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூலை 17ம் தேதி உலகம் முழுவதும் படம் திரைக்கு வருகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக்கும், லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டீசரும் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன், வாழ்க்கையில் முன்னேற கடுமையாக உழைத்து ஒரு வாகனம் வாங்குகிறார். வாகனம் திருடப்பட்ட பிறகு அதற்கு பலர் உரிமை கோருகின்றனர்.

வாகன திருட்டு மாஃபியாவை மையப்படுத்தி காமெடி, சென்டிமெண்ட் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் படம் உருவாகியுள்ளது. ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ இயக்குனர் பி.லெனின் பாரதியின் உதவியாளர் ரா.ராஜ்மோகன் இயக்கியுள்ளார். தவிர அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், பி.லெனின் பாரதி, மதன் தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, எம்.சவுந்தர்யா சரவணன், சென்ராயன், ஹலோ கந்தசாமி, ரஞ்சன் குமார், பவா லட்சுமணன் நடித்துள்ளனர். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். மு.காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்ய, பி.சேகர் அரங்குகள் அமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.

Tags : Yogi Babu ,Krithika Thangapandi.S ,Thangapandi.T ,Dev Cinemas Private Limited ,Vijay Sethupathi ,Lokesh Kanagaraj ,
× RELATED அந்தரன் விமர்சனம்…