×

காஷ்மீரில் அரசு பள்ளியை மேம்படுத்த அக்‌ஷய் குமார் ரூ.1 கோடி நிதியுதவி

மும்பை: இந்திய எல்​லை பாது​காப்​பு படை​ அழைப்​பின் பேரில், காஷ்மீரில் இருக்கும் எல்​லை பகு​திக்கு அக்‌ஷய் குமார் சென்றிருந்​தார். அப்போது அங்​குள்ள எல்​லை கட்​டுப்​பாட்​டு கோடு அருகே, குரேஸ் பள்​ளத்​தாக்​கின் நெரோ துலைல் கிராமத்​துக்​கு சென்​றார். அங்​குள்ள அரசு பள்ளி மாணவர்​களு​டன் அவர் கலந்துரையாடிய​ போது, அவர்​களின் கல்​வி தேவை​களை​யும், பள்​ளி​யின் நிலை​யை​யும் பார்த்துவிட்டு, உடனடி​யாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்​கு​வ​தாக அறி​வித்​தார்.

அதன்​படி அவர் அளித்த நிதி​யை கொண்​டு, அந்த பள்​ளி​யின் உள்​கட்​டமைப்பை மேம்படுத்​தி​ இருக்கின்றனர். புதிய வகுப்​பறை​கள், கணினி ஆய்​வகம், நூல​கம், ஆசிரியர்​களுக்​கான அலு​வலக அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளது. அக் ஷய் குமார் தனது மறைந்த தந்தை ஹரி ஓம் பாட்​டி​யா​வின் நினை​வாக, இந்​த புதிய பள்ளி கட்​டிடத்​துக்கு ‘ஹரி ஓம் பாட்​டியா கல்வி வளாகம்’ என்று பெயர் சூட்டியுள்​ளார். அக்‌ஷய் குமாரின் இச்செயலை சமூக வலை​த்தளங்​களில் பல்வேறு தரப்பினர் பாராட்டி வரு​கின்​றனர்.

Tags : Akshay Kumar ,Kashmir ,Mumbai ,Indian ,Indian Army ,Nero Thulail ,Kuressaare border ,Line ,
× RELATED பிரியா பவானி சங்கரின் அழகு ஆராய்ச்சி