சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிப்பில் பிசியாகி இருக்கும் பிரியா பவானி சங்கர், உடற்பயிற்சி மற்றும் அழகு பராமரிப்பு குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், ‘80 சதவீதம் தன்னம்பிக்கை அடிப்படையில்தான் இயங்குகிறது. மற்ற எல்லாமே அந்தவழியாக வரக்கூடியவையே. இது எல்லாமே காலத்துக்கு ஏற்ப மாறக்கூடிய விஷயங்கள். 30 வருடங்களுக்கு முன்பு இருந்த அழகு பற்றிய வரையறை வேறு, இன்றுள்ள அழகின் வரையறைகள் வேறு. இனி வரப்போவதும் வேறு. ஆனால், தன்னம்பிக்கை என்பது நிரந்தரமானது. நம்மை சுற்றியிருப்பவர்கள் நம்மை கூட, உனக்கு இவ்வளவு போதும் என்பார்கள். சில நேரம் அது நம் நல்லதுக்காக கூட இருக்கலாம். ஆனால், நமக்கு எது சரி, எது தேவை என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
சேட்டிஸ்பையாவது வேறு, செட்டிலாவது வேறு. இப்படி இருந்தால் அழகு, இதுதான் அழகு என்று சொன்னால், அதை ஏற்றுக்கொள்ளாதீர்கள். அங்குதான் தன்னம்பிக்கை தேவை என்று நினைக்கிறேன். இன்புளூயன்சர்ஸ் தாக்கம் அதிகரித்து இருப்பது பார்வையாளருக்கு புரிய ஆரம்பித்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு சோஷியல் மீடியாவில், இதை வாங்குங்கள் என்று சொன்னால் வாங்கியிருக்கலாம். இன்று அந்த மனநிலை மாறிவிட்டது. பணம் வாங்கித்தான் அவர்கள் பேசுகின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொண்டனர். இப்போது ஒரு தரமான பொருளை விளம்பரம் செய்வதற்கு மட்டுமே இன்புளூயன்சர்ஸ் தேவை. அது விற்பனையாக, அந்த பொருளின் தரம்தான் முதன்மையாக இருக்கிறது’ என்றார்.

