×

நடிகைகள் மீது அமீஷா பட்டேல் குற்றச்சாட்டு

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல், தமிழில் விஜய்​யுடன் ‘புதிய கீதை’ என்ற படத்​தில் நடித்திருந்தார். தொடர்ந்து இந்​தி​ படங்களில் நடித்து வரும் அவர், பாலிவுட்​டில் இளம் நடிகைகள் போலியான பப்​ளிசிட்டி மூலம் தங்களுக்கு சூப்​பர் ஸ்டார் என்ற பிம்​பத்தை உரு​வாக்க முயற்​சிப்​ப​தாக குற்றம் சாட்டி​யுள்​ளார். இதுகுறித்து பதி​விட்​டுள்ள அவர், ‘பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைத்​து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்​படுத்​தும் படங்​களை கொடுத்​திருந்​தால், உங்களை சூப்​பர் ஸ்டார் என்று சொல்லுங்​கள். அது​வரை, சூப்​பர் ஸ்டார் என்​ற விளம்பர விளை​யாட்டு எதுவும் வேண்டாம்.

இது​தான் கசப்பான உண்​மை. திரையுலகில் தனியாக ஒரு பிளாக்பஸ்டர் படத்தை கூட கொடுக்​க முடியாத நிறைய நடிகைகள், வருடத்​துக்கு ஓரிரு சாதா​ரண படங்​களில் மட்டும் நடித்​துவிட்டு படப்​பிடிப்​பு தளங்​களில் இருப்​ப​தால், தங்​களை நட்​சத்​திரங்​கள் என்று பெருமையாக சொல்கின்றனர். ஒரு படம் கூட பாக்ஸ் ஆபீஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலிக்காத பல நடிகைகள், தங்​களை நம்​பர் ஒன் மற்றும் நம்​பர் டூ என்று சொல்ல, சோஷியல் மீடியாவின் விளம்​பர குழுக்களுக்​கு பணம் தருகின்றனர். 2026ம் வருடத்தில் 100 கோடி ரூபாய் வசூல் கூட சாதாரணம் என்றாகி விட்டது’ என்று காட்டமாக குறிப்பிட்டுள்​ளார். அவரது பதிவு பலத்த சர்​ச்​சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ameesha Patel ,Bollywood ,Vijay ,
× RELATED ‘திரிஷ்யம்’ படத்தால் குற்றங்கள் நடக்கிறதா? மோகன்லால் பதில்