- பிரியங்கா
- பான் வேர்ல்ட்
- மகேஷ் பாபு
- பிரியங்கா சோப்ரா
- பிரித்விராஜ் சுகுமாரன்
- ச.
- ராஜமௌலி
- விஜயேந்திர பிரசாத்
- எம். எம் கிராவாணி
- கென்யா
- கார்த்திகேய

மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் நடிக்கும் ‘வாரணாசி’ என்ற பான்வேர்ல்ட் படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்குகிறார். அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி படம் திரைக்கு வருகிறது. முக்கியமான காட்சிகள் கென்யா நாட்டிலுள்ள காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்திய இதிகாசங்களுக்கும், லத்தீன் அமெரிக்க கலாசாரத்துக்கும் இடையிலுள்ள ஒற்றுமை குறித்து தயாரிப்பாளர் எஸ்.எஸ்.கார்த்திகேயா பேசும்போது, ‘இந்தியாவில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து நாங்கள் பெருமளவு உத்வேகம் பெறுகிறோம். ‘வாரணாசி’ படத்தில் சுமார் 20 நிமிடங்கள் ராமாயணம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறுகின்றன’ என்றார்.

