மும்பை: இந்தி தெரியாத சாய் பல்லவி ராமாயணம் படத்தில் நடிப்பதை வடநாட்டு ரசிகர்கள் எதிர்க்க, அவருக்கு ஆதரவாக தென்னிந்திய ரசிகர்கள் குரல் எழுப்பியுள்ளனர். சமீபத்தில் ஆமிர்கானின் ஏக் தின் பட நிகழ்வில் பங்கேற்ற சாய் பல்லவி, தனக்கு இந்தி தெரியாது என பேசினார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வடஇந்திய ரசிகர்கள், ‘‘சாய் பல்லவிக்கு இந்தி தெரியாது. ஆனால் ராமாயணத்தில் சீதையாக நடிக்கிறார். இந்திய ராணுவத்தை பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒப்பிட்டு பேசியவர். ரூ. 4 ஆயிரம் கோடி செலவில் உருவாகும் ராமாயணம் படத்தில் இது போன்ற ஆட்களை ஏன் நடிக்க தேர்வு செய்தார்கள். சாய் பல்லவிக்கு பதில் இந்தி தெரிந்த ஒரு நடிகையை சீதையாக நடிக்க வைத்திருக்கலாம். இங்கு ஆட்களே இல்லை என்றா அவரை போய் நடிக்க வைக்கிறார்கள்’’ என்றார்கள்.
அதை பார்த்த தென்னிந்திய ரசிகர்கள் சாய் பல்லவிக்கு ஆதரவாக களத்தில் குதித்துவிட்டார்கள். அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடும்போது, ‘‘நடிப்புக்கு மொழி தேவையில்லை. நடிக்கத் தெரிந்தால் போதும். பாலிவுட்டில் சாய் பல்லவி மாதிரி நடிக்கத் தெரிந்த யாரையாவது காட்டுங்கள் பார்க்கலாம். சீதா மாதா நேபாளத்தை சேர்ந்தவர். அவர் ஒன்றும் இந்தி பேசவில்லை. மேலும் டப்பிங் என்கிற ஒன்று இருப்பது உங்களுக்கு எல்லாம் தெரியுமா, தெரியாதா?. சாய் பல்லவிக்கு யாரையாவது டப்பிங் பேச வைக்கலாம்’’ என்றனர்.
