×

‘மகாவதார் பரசுராம்’ பர்ஸ்ட் லுக்

பரசுராம ஜெயந்தியின் புனிதமான தருணத்தில், தனது அடுத்த பிரமாண்டமான படமான ‘மகாவதார் பரசுராம்’ குறித்து ஹோம்பாலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது. ‘ராஜகுமாரா’, ‘கேஜிஎஃப்’ 2 பாகங்கள், ‘காந்தாரா’ 2 பாகங்கள், ‘சலார்’, ‘மகாவதார் நரசிம்மா’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்நிறுவனம், தற்போது ‘மகாவதார் பரசுராம்’ என்ற முழுநீள அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கத்தில் தயாரித்து வருகிறது.

கிளீம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, வரும் 2027 டிசம்பர் மாதம் இப்படம் பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. முன்னதாக ஹோம்பாலே பிலிம்ஸ், மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸை அறிவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்த யுனிவர்ஸின் அடுத்த படைப்பாக ‘மகாவதார் பரசுராம்’ படம் உருவாகிறது. இளம் தலைமுறையினருக்கு விஷ்ணு அவதாரங்களின் மகிமைகளை பற்றி உயிர்ப்புடன் சொல்வதே இதை உருவாக்குவதன் நோக்கமாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Tags : Hombale Films ,Ashwin Kumar ,Cleam Productions ,
× RELATED விமர்சகர்களே படைப்பாளர்களாக மாறும் நிகழ்ச்சி: ஓடிடி தளத்தில் புதுமை