மும்பை: தமிழில் ஜீவா நடித்த ‘பொறி’, அருண் விஜய் நடித்த ‘மலை மலை’, மம்மூட்டி நடித்த ‘வந்தே மாதரம்’ ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியவர், இந்தி நடிகை டெய்ஸி ஷா. கன்னடம், இந்தி, மராத்தி, குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் அவர், தென்னிந்திய இயக்குனர் ஒருவரால் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பேசியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து அவர் கூறியதாவது: நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில், தென்னிந்திய இயக்குனர் ஒருவர், தனது படத்துக்காக ஒரு நடிகையை தேர்வு செய்ய மும்பைக்கு வந்திருந்தார். அவரை நேரில் சந்தித்து பேச சிலர் சென்றிருந்தோம்.
அவர் ஒவ்வொரு பெண்ணையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். பிறகு என்னிடம் பேசிய அவர், திடீரென்று என்னுடைய கையை பிடித்து அழுத்தியது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. மற்றவர்கள் என்னை தொடுவது குறித்து எப்போதுமே ஒருவித பயம் ஏற்படும். நான் மசாஜ் செய்யாததற்கு முக்கியமான காரணமே, மற்றவர்கள் என்னை தொடுவது பிடிக்காததுதான்.
