சென்னை: இன்ஸ்டாகிராமில் கேரளத்தை சேர்ந்த பிரபலங்களில் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட லிஸ்ட்டில், முதல் இடத்தில் இருந்தார் கீர்த்தி சுரேஷ். அவரை 1.88 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், தற்போது அவரை கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் முந்தியுள்ளார். டி20 உலக கோப்பைக்கு முன்பு வரை அவரை பின்தொடர்பவர்கள் 1.4 கோடியாக இருந்தது. உலக கோப்பை போட்டிகளில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தால், தற்போது 1.91 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த முன்னேற்றத்துக்கு காரணம், கிரிக்கெட்டில் அவரது நிலையான ஆட்டம், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் ஆதரவு, வளர்ந்து வரும் அவரது சர்வதேச அங்கீகாரம் என்று சொல்லப்படுகிறது. அதோடு, அவரது அமைதியான குணம் மற்றும் தலைமை பண்புகளும் பிற காரணங்கள் என்று கூறப்படுகிறது. சமீபகாலமாக அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருவதால், தற்போது இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்திருக்கும் நிலையில், அவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால், கீர்த்தி சுரேஷ் பின்தங்கிய நிலையில் இருக்கிறார். காரணம், சமீபகாலங்களில் அவரது படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை.
