×

அரசியல் காமெடி கதையில் ரவி மரியா

சென்னை: நடிகர் ரவி மரியா கதையின் நாயகனாக நடிக்கும் ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதை தமிழருவி மணியன் வெளியிட்டார். ராம் தேவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படத்தில் ரவி மரியா, அக்ஷரா விஜய், ராதா ரவி, பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, பயில்வான் ரங்கநாதன், இயக்குனர் ரங்கநாதன், கவிதாலயா சரவணன்,அக்னி S வருண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் கே எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். கற்பனையான கதையுடன் நிகழ்கால அரசியலை காமெடியாக சொல்லும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கவிதாலயா சரவணன் மற்றும் ஆர். சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ‘‘சமகால அரசியலை நகைச்சுவையுடனும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியிடப்படும்’’ என்றார்.

Tags : Ravi Maria ,Chennai ,Ruvi Manian ,Ram Dev ,Akshara Vijay ,Radha Ravi ,Pazhala Karuppaiya ,Nanjil Sampath ,Perarasu ,Kanja Karuppu ,Payilvan Ranganathan ,Ranganathan ,Kavithalaya Saravanan ,Agni S Varun ,Karthik K S Nair ,
× RELATED ஊராட்சி மன்ற தலைவர் இயக்கி நடித்த படம்