×

இப்போதைக்கு நான் சிங்கிள்தான்: சொல்கிறார் ஸ்ருதி ஹாசன்

சென்னை: இப்போதைக்கு நான் சிங்கிளாக வாழ்கிறேன். அதில் அமைதி இருக்கிறது என்றார் ஸ்ருதி ஹாசன். அவர் கூறியது: 6 முறை காதலில் விழுந்தேன். எல்லாமே தோல்வியில் முடிந்தது. இதனால் கடும் மனவலிக்கு ஆளானேன். இப்போது தனித்துதான் வாழ்ந்து வருகிறேன். அதில் அமைதியும் காண்கிறேன். வாழ்க்கை பலமுறை பலவற்றை எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. அது எல்லாமே ஒரு அனுபவம்தான்.

மீண்டும் காதல் வராது என்பதில்லை. ஆனால் வரும்போது அது பற்றி நானே சொல்வேன். இசையில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனது பிராண்ட் நடத்தும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராகி வருகிறேன். நடிப்பையும் நேசிக்கிறேன். இதனால் வரும் வாய்ப்பையெல்லாம் ஏற்காமல் குறிப்பிட்ட படங்களையே தேர்வு செய்கிறேன். இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.

Tags : Shruti Haasan ,Chennai ,
× RELATED இந்திய சினிமாவில் முதல்முறையாக ரூ.30 கோடி சம்பளம் பெறும் ஏ.ஆர். ரஹ்மான்