×

32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த இளையராஜா

சென்னை: சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், இளையராஜா வெற்றிக்கூட்டணி, 32 வருடங்களுக்கு பிறகு ‘லெனின் பாண்டியன்’ என்ற படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இக்கூட்டணி ‘மூன்றாம் பிறை’, ‘தங்க மகன்’, ‘காக்கி சட்டை’, ‘பகல் நிலவு’, ‘காதல் பரிசு’, ‘கிழக்கு வாசல்’, ‘பணக்காரன்’, ‘இதயம்’, ‘ஆனஸ்ட் ராஜ்’ உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து பணியாற்றி, பல்வேறு ‘கல்ட் கிளாசிக்’ படங்களை வழங்கியுள்ளது. ‘லெனின் பாண்டியன்’ படத்தை டி.டி.பாலச்சந்திரன் எழுதி இயக்கியுள்ளார். கிராமத்து மனிதர்களின் வாழ்வியல் மற்றும் சமூக உண்மைகளை பேசும் அழுத்தமான படைப்பாக படம் உருவாகியுள்ளது. சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன் ஹீரோவாக அறிமுகமாகிறார். முக்கிய கேரக்டரில் கங்கை அமரன், அவரது ஜோடியாக ரோஜா நடித்துள்ளனர். செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, தளபதி தினேஷ் சண்டைப்பயிற்சி அளித்துள்ளார். நாகூரான் ராமச்சந்திரன் எடிட்டிங் செய்ய, அதூரி ஜெய்குமார் அரங்கம் அமைத்துள்ளார்.

Tags : Ilayaraja ,Chennai ,Sathyajothi Films ,D.G. Thiagarajan ,D.T. Balachandran ,
× RELATED சல்மான்கான் படத்தில் நயன்தாரா