×

‘எங்கம்மா சமையல் மாதிரி இல்லை’ஆண்களுக்கு ஸ்ருதி ஹாசன் சுளீர்

சென்னை: பேட்டி ஒன்றில் நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் கூறியதாவது: இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பார்த்தேன். அது ரொம்ப காமெடியாக இருந்தது. தன் காதலியோ அல்லது மனைவியோ தன் அம்மா மாதிரி சமைக்கவில்லை என்று அந்த நபர் ரொம்ப அப்செட் ஆனார். அதற்கு அந்த இளம்பெண், ‘‘அவர் உங்கம்மா தானே. நீங்கள் தானே உங்களின் வாழ்க்கை முழுவதும் அவர் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டிருக்கிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் தானே உங்கம்மா மாதிரி சமைக்கணும்.

நான் எங்கம்மா மாதிரி தான் சமைக்கணும். நான் ஏன் உங்கம்மா மாதிரி சமைக்கணும்’’ என்று தெரிவித்துள்ளார். இது சரியான பதிலடி என்றார் ஸ்ருதிஹாசன். ஸ்ருதி ஹாசன் சொன்ன விஷயம் பெண்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘‘ராஸ்கல்ஸ், இனி யாராச்சும் எங்கம்மா சமையல் மாதிரினு பேசினால் அப்புறம் இருக்கு வேடிக்கை. அருமையாக சொன்னீர்கள் ஸ்ருதிமா’’ என பெண்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கமென்ட் செய்து வருகிறார்கள்.

Tags : Shruti Haasan ,Chennai ,
× RELATED மாமியாரை அழ வைத்த ராஷ்மிகா: பட விழாவில் சம்பவம்