×

தென்னிந்திய சினிமாவில் நடிகைகளை ஆபாசமாக காட்டுகிறார்கள்: டாப்ஸி திடீர் புகார்

மும்பை: பாலிவுட்டில் பிசியாகிவிட்ட டாப்ஸி, இந்தியில் அஸ்ஸி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்தது. சமீபத்தில் டாப்ஸி அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய சினிமாவை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது: தென்னிந்திய படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நடந்த அசவுகரியமான விஷயம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘தென்னிந்திய திரைத்துறையில் கிளாமர் காட்சிகளுக்கும் மற்றும்
பாடல் காட்சிகளுக்கும் என்னை டைட்டான ஆடை அணிய சொன்னார்கள்.

உள்ளாடையில் ‘பேட்’ வைக்க வற்புறுத்துவார்கள். அதை அணிந்தால் வேறுபாடுகள் தெளிவாக தெரியும். அதை அனைவரும் கவனிப்பார்கள் என்பதால், அது எனக்கு மிகவும் அசவுகரியமாகவும், அவமானமாகவும் இருப்பதை உணர்ந்தேன். பாலிவுட்டை விட தென்னிந்திய படங்களில் கிளாமரை மட்டுமே அதிகமாக காண்பிக்கின்றனர். மேலும், இடுப்பு பகுதியை ஆபாசமாக காட்டுகின்றனர் என்று புகார் சொல்லும் வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சு வைரலாகி வருகிறது.

Tags : Taapsee ,Mumbai ,Bollywood ,
× RELATED கிரைம் திரில்லர் கதை ‘தி ஐ 3’