×

ரசிகர்களை ஈர்க்கவே கிளாமர் உடை அணிகிறேன்: மாளவிகா மோகனன் ஓபன் டாக்

சென்னை: சமீபத்தில் தமிழ் நடிகைகளுக்கு நடிக்கத் தெரியாது என சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மாளவிகா மோகனன். இந்த நிலையில், இவரது புகைப்படங்கள் சமீப காலங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகின்றன. காரணம், இவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வருகிறார். அது மட்டுமல்லாமல், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் அவர் கவர்ச்சி உடையிலேயே காட்சியளிக்கிறார்,

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘கதாநாயகிகளுக்குத் தேவையானது ரசிகர்களும், ரசனையும் தான். அந்த வகையில், என் ரசிகர்களின் ரசனைகளுக்காக, என் உடைகள் மீது நான் கவனம் செலுத்தி வருகிறேன். என்னைப் பார்ப்போரின் கண்களை ஈர்ப்பதே என் நோக்கம். அதனால், எனது ஒவ்வொரு ஆடையையும் நான் கவனமாகத் தேர்வு செய்கிறேன். மேலும், எனது ஆடைகளுக்கும், எனது அழகிற்கும் குவியும் ரசிகர்களின் கமெண்ட்களை நான் ரசிக்கிறேன். அதனால்தான் எங்கு போனாலும் கவர்ச்சியை விடுவதில்லை” என்று கூறியுள்ளார்.

Tags : Malavika Mohanan ,Chennai ,
× RELATED வித் லவ் விமர்சனம்…