மும்பை: முன்னணி நடிகை தமன்னா, கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நீடித்து வருகிறார். தமிழில் கடந்த 2024ல் சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 4’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக ‘புருஷன்’ என்ற படத்தில் நடிக்கிறார். தவிர ‘ஓ ரோமியோ’, ‘ரேஞ்சர்’, ‘விவான்’, ‘வி சாந்தாராம்’ மற்றும் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஒரு படம் என்று, இந்தியில் பல படங்களில் நடிக்கிறார். சில படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுகிறார். அப்பாடல்கள் ஹிட்டாகி விடுவதால், ஒரு பாடலுக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் தமன்னா, தற்போது சினிமாவை மட்டுமே நம்பாமல் புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். தமன்னா ஃபைன் ஜூவல்லரி என்ற நிறுவனத்தை தொடங்கிய அவர், அந்நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

