×

படம் தடைபடாமல் உருவாக ஹீரோயின் உதவினார்: இயக்குனர் உருக்கம்

சென்னை: சத்தியத்தின் சக்தியை மையப்படுத்தி ‘ப்ராமிஸ்’ என்ற படம் உருவாகியுள்ளது. அருண் குமார் சேகரன் ஹீரோவாக நடித்து எழுதி இயக்க, புதுமுகம் நதியா ஹீரோயினாக நடித்துள்ளார். சங்கமித்ரன் புரொடக்‌ஷன்ஸ், அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் என்.நாகராஜன் தயாரித்துள்ளார். சரவண தீபன் இசை அமைக்க, பாலா பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கே.ராஜன், பேரரசு, ஜாகுவார் தங்கம், ‘காதல்’ சுகுமார் கலந்துகொண்டனர்.

அப்போது அருண் குமார் சேகரன் உருக்கத்துடன் பேசியதாவது: இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களோ, பிரமாண்டமான பட்ஜெட்டோ கிடையாது. எங்களை மேலே கொண்டு வர யாரும் இல்லை. நான் ஊடகத்தில் பணியாற்றினேன். பிறகு ஒரு பைலட் பிலிம் உருவாக்கினேன். நாங்கள் 12 பேர் மட்டும் கொண்ட குழுவாக இருந்து நிறைய வேலைகளை செய்தோம். ஒருகட்டத்தில் இந்த படம் நிறுத்தப்பட்டுவிடுமோ என்ற பயம் இருந்தது. அந்த இக்கட்டான நேரத்தில் ஹீரோயின் நதியா கைகொடுத்து உதவினார். அதை எங்களால் எப்போதுமே மறக்க முடியாது.

Tags : Urukam ,Chennai ,Arun Kumar Sekaran ,Nadiya ,N. Nagarajan ,Sangamithran Productions ,Amman Arts Creations ,Saravana Deepan ,Bala ,K. Rajan ,Perarasu ,Jaguar Thangam ,Kaathal' Sukumar ,
× RELATED கயாடு லோஹர் படக் குழுவினருக்கு அபராதம்