- சென்னை
- புதுச்சேரி
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- ஏ.எஸ்.ரவிச்சந்திரன்
- ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ்
- ஜனனி
- சிங்கம் புலி
- மதுமிதா
- ராம
- முனார் ரமேஷ்
- முருகதாஸ்
- வந்தனா
- ஃபெரோஸ் கான்
- சுகன்யா
- கோசலைக்கும்
சென்னை: ஏஎஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயாரித்திருப்பதோடு ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஜனனி கதாநாயகியாக நடிக்க, சிங்கம்புலி, மதுமிதா, ரமா, முனார் ரமேஷ், முருகதாஸ், வந்தனா, ஃபெரோஸ் கான், சுகன்யா, கௌசல்யா என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.சதீஷ் எஸ். இப்படத்திற்கு இசையமைப்பதோடு பாடல்களையும் எழுதியுள்ளார். தேவசூர்யா கே. ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரஞ்சித் குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
