×

வெப்சீரிஸ் தயாரிக்கிறார் வெற்றிமாறன்

சென்னை: சினிமாவிலிருந்து வெப்சீரிசுக்கு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை படத்தை இயக்கியபடி வெப்சீரிஸ் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த வெப்சீரிசுக்கு அவர் பேட்டைக்காளி என தலைப்பிட்டுள்ளார். இதை ‘அண்ணனுக்கு ஜே’ படத்தை இயக்கிய வெற்றிமாறனின் உதவி இயக்குனர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். கலையரசன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிசுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கும் இந்த வெப் தொடர் கிராமத்தில் நடக்கும் முக்கிய சம்பவங்களை தொகுத்து, ஒரு கனமான விஷயத்தை பேசுகிறதாம். ஆஹா தமிழ் ஓடிடி தளத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடர் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vetrimaran ,
× RELATED இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் ஜெயம்...