- வா
- கார்த்தி
- சென்னை
- கிருத்தி ஷெட்டி
- சத்யராஜ்
- ராஜ்கிரண்
- ஷில்பா மஞ்சுநாத்
- ஆனந்தராஜ்
- கருணாகரன்
- ஜி.எம். சுந்தர்
- ரமேஷ் திலக்
- பி.எல். தேனப்பன்
- ஜார்ஜ் வில்லியம்ஸ்
- டி.ஆர்.கே. கிரண்
- வெற்றி
- கே.இ.ஞானவேல் ராஜா
- ஸ்டுடியோ கிரீன்
- நளன் குமாரசாமி
- சந்தோஷ் நாராயணன்
சென்னை: கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்தராஜ், கருணாகரன், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், பி.எல்.தேனப்பன் நடித்துள்ள படம், ‘வா வாத்தியார்’. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, டி.ஆர்.கே.கிரண் அரங்கம் அமைத்துள்ளார். வெற்றி எடிட்டிங் செய்ய, அனல் அரசு சண்டை பயிற்சி அளித்துள்ளார். வரும் 12ம் தேதி படம் திரைக்கு வருகிறது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, நலன் குமாரசாமி எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்துக்காக இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது தாயாருடன் இணைந்து பாடிய ஒரு பாடல் வைரலாகி வருகிறது. எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்ற பாடலை தனது தாயாருடன் இணைந்து ரீமிக்ஸ் செய்து சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கும் பாடல், இணையதளங்களில் ைவரலாகியுள்ளது. சந்தோஷ் நாராயணனின் தாயாருக்கு கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி, தேவி பிரசாத், விஜய் யேசுதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் வேடத்தில் கார்த்தி நடித்துள்ளார்.

