×

பிரியங்கா சோப்ரா நடித்த அடல்ட் ஒன்லி படம் ஓடிடியில் வெளியாகிறது

தீபிகா படுகோனா நடித்துள்ள அடல்ட் ஒன்லி படம் கெஹ்ரையான். இதில் அவருடன் சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே, தைரியா கர்வா, நாசருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷகுன் பத்ரா இயக்கி உள்ளார். இந்த படம் முதலில் தியேட்டரில் வெளியாவதாக இருந்தது. ஆனால் தணிக்கை குழுவினர் அனுமதி கிடைக்காது என்பதால் ஒடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி வருகிற பிப்ரவரி 11ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

இதுகுறித்து பிரியங்கா சோப்ரா கூறியிருப்பதாவது: கெஹ்ரையானில் எனது கதாபாத்திரம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது மற்றும் திரையில் நான் நடித்த மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று. அதே நேரத்தில் வேடிக்கையாகவும் சவாலாகவும் இருக்கும் ஒரு பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போராட்டங்களும் உண்மையானவை, அமேசான் பிரைம் வீடியோவுடன் இந்த கதையை உலகளவில் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என்கிறார்.

Tags : Priyanka Chopra ,
× RELATED வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தையை 100...