×

ஒரே படத்தில் 5 ஹீரோயின்கள்

அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷ் தற்போது நடித்து வரும் படம் ஏவாள். இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார்.  இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர் பெங்காலியில் சில படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்தவர். தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம். இன்னொரு நாயகியாக கௌரி சர்மா நடித்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் சில படங்களில் தோன்றியவர். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்திய முன்னணி மாடலான மதுமிதாவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் பிருத்விராஜ் படம் உள்ளிட்ட  சில படங்களில் நடித்துள்ள அக்ஷரா ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல மாடல் பர்சிதா சின்காவும் இருக்கிறார். இவர் இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

இன்னொரு மாடல் ஆர்த்தி கிருஷ்ணாவும் நடித்துள்ளார். இவர்  மலையாளத்தில் 3, தமிழில் 2 என்று படங்களில் நடித்துள்ளவர். இப்படி 5 கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மிப்பு, பிரவீன்,மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜித்தேஷ் கருணாகரன் இயக்கி உள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஆர்த்தி கிருஷ்ணா மற்றும் ஆர்.எல் ரவி தயாரித்துள்ளனர். தனது காதலியின் திடீர் மரணத்துக்குக் காரணம் முகம் மறைத்துத் திரியும் சைக்கோ  கொலைகாரன் என்ற உண்மை நாயகனுக்குத் தெரிய வருகிறது. அவனைப் பழி வாங்க புறப்படுகிறான் நாயகன்.இதற்கிடையில் பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகள் விளையாடுகின்றன. இதன் பின்னணியில் உருவாகி உள்ள படம்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!