×

மோசடி புகார் தொடர்பாக இந்தி நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை

இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் ரூ. 2 கோடி மோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ஜாக்குலின் ஆஜராகியுள்ளார்.

மேலும், சிறையில் இருந்துகொண்டே இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்களிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் நடிகை ஜாக்குலினுக்கு உள்ள பங்கு என்ன என்பது குறித்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

Tags : Jacqueline ,
× RELATED நடமாடும் ரத்த தான ஊர்தியில் தமிழை...