×

அஜித்துடன் மீண்டும் அனிருத்

அஜித், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத் கூட்டணி இணைந்து வெளியிட்ட படம், ‘நேர்கொண்ட பார்வை’. இதையடுத்து அதே கூட்டணி இணைந்துள்ள படம், ‘வலிமை’. இது வரும் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இதே கூட்டணி மூன்றாவது முறையாக இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அஜித்தின் 61வது படமான இதற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த நிலையில், திடீரென்று அனிருத்தை படக்குழு அணுகியதற்கான காரணம் தெரியவில்லை. ஏற்கனவே அஜித்தின் ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களுக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். ‘வேதாளம்’ படத்தில் ‘ஆலுமா டோலுமா’ என்று அஜித் ரசிகர்களை ஆடவிட்ட அவர், மூன்றாவது முறையாக அஜித்துடன் கூட்டணி அமைத்துள்ளதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படம் வரும் 2022 தீபாவளியன்று திரைக்கு வருகிறது.

Tags : Anirudh ,Ajith ,
× RELATED வலிமை வெளிவரும் முன்பே அஜீத்தின் அடுத்த பட பணிகள் தொடங்கியது