×

கேரளாவில் 25ம் தேதி தியேட்டர்கள் திறப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா 2வது அலை பரவ தொடங்கியதை தொடர்ந்து கடந்த மே மாதம் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் சினிமா தயாரிப்பு சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வரும் 25ம் தேதி தியேட்டர்களை திறக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தங்களது கோரிக்கைகளான, கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்.

விடுமுறை விடப்பட்ட நாட்களில் மின்வாரியத்தின் வைப்பு நிதியை ரத்து செய்ய வேண்டும். கட்டிட வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே தியேட்டர்களை திறப்போம் என தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர். இதுதொடர்பாக நாளை(22ம் தேதி) தியேட்டர் உரிமையாளர்களுடன் கேரள காலச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியான் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே தியேட்டர்கள் திறக்கப்படும் என கேரள சினிமா தியேட்டர் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Tags : Kerala ,
× RELATED கேரளாவில் ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில் சேவைகள் ரத்து