×

பங்களாதேஷ் வகுப்புவாத வன்முறை கொதித்தெழுந்த பெங்காலி நடிகை: போட்டோவை அகற்றி கண்டனம்

கொல்கத்தா: பங்களாதேஷில் நடந்த வகுப்புவாத வன்முறை சம்பவத்தை கண்டித்து கொதித்தெழுந்த பெங்காலி நடிகை, தனது சமூக வலைதளத்தில் உள்ள போட்டேக்களை அகற்றிவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் பங்களாதேஷ் நாட்டின் கொமில்லா, ஃபெனி, ரங்பூர், சிட்டகாங் பகுதிகளில் உள்ள இஸ்கான் கோயில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. அதனால் ஏற்பட்ட வன்முறையில் அங்குள்ள சிறுபான்மை சமூகத்தினர் சிலர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 4,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா  உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல பங்களாதேஷ் நடிகையும், பெங்காலி படங்களில் நடித்தவருமான ஜெயா அஹ்சன் தனது சமூக வலைதள பக்கத்தில், பங்களாதேஷில் நடந்த வகுப்புவாத வன்முறையைக் கண்டித்துள்ளார். மேலும்,  கவிஞர் பட்டாச்சார்யாவின் புகழ்பெற்ற கவிதையை மேற்கோள் காட்டியுள்ளார். அதேபோல், தனது சுயவிபர புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் இருந்து அகற்றிவிட்டார். அவரது பதிவில் (கவிஞரின் வார்த்தைகள்), ‘மரண பள்ளத்தாக்கான இந்த நாடு, என்னுடைய நாடு அல்ல; மரண தண்டனையை கொண்டாடுபவர்களின் நாடு எனது நாடு அல்ல; வன்முறையால் சுடுகாடாக மாறிய நாடு எனது நாடு அல்ல, ரத்தக் கறை படிந்த வீடு எனது நாடு அல்ல’ என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

Tags :
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்