×

தமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சாரமூடு நடித்த படம், தி கிரேட் இந்தியன் கிச்சன். திருமணமான இளம் பெண், ஆணாதிக்கம் நிறைந்த கணவனிடமும், அவனது குடும்பத்தினரிடமும் சந்திக்கும் பிரச்னைகளும், பிறகு அந்தப் பெண் எடுக்கும் முடிவுகளும்தான் கதை. கடந்த ஜனவரி 15ம் தேதி ஓடிடியில் வெளியான இப்படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அதற்கான உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் வாங்கியுள்ளார். 

அவரது இயக்கத்தில், நிமிஷா சஜயன் நடித்திருந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். தமிழிலும், தெலுங்கிலும் அவரே நடிக்கிறார். ஏற்கனவே அவர் தமிழில் இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல், துருவ நட்சத்திரம், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு, பூமிகா, தெலுங்கில் தக் ஜகதீஷ், ரிபப்ளிக், மலையாள அய்யப்பனும் கோஷியும் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Aishwarya Rajesh ,
× RELATED தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் வெற்றி பெற்ற 11 பேர் ராஜினாமா