×

நடிகரான இயக்குனர் பிரபு சாலமன்

இயக்குனர்கள் பலர் நடிகர்களாக மாறி பிசியாகி விட்டனர். அதில் சிலர் மீண்டும் படம் இயக்கும் எண்ணமே இல்லாமல், நடிப்பிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மைனா, கும்கி, கயல், தொடரி உள்பட பல படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன், இயக்குனர் அகத்தியனிடம் உதவியாளராக இருந்தபோது, ஓரிரு படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். தற்போது அவர் இந்தியில் ஹாத்தி மேரா சாத்தி, தமிழில் காடன், தெலுங்கில் ஆரண்யா ஆகிய படங்களையும், தமிழில் கும்கி 2ம் பாகத்தையும் இயக்கியுள்ளார். விரைவில் இப்படங்களின் ரிலீஸ் தேதி வெளியாகிறது. 

இதையடுத்து பிரபு சாலமன் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சீனு ராமசாமியின் உதவியாளர் ஆர்.விஜயகுமார் இயக்கும் படம், அழகிய கண்ணே. இதில் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவரது ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். பிரபு சாலமன் நடிக்கும் கேரக்டர் பற்றி சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது. அவரிடம் கதை சொன்னபோது, தனது கேரக்டர் பற்றி விரிவாகக் கேட்ட பிறகே நடிக்க சம்மதித்ததாக ஆர்.விஜயகுமார் தெரிவித்தார். வைரமுத்து பாடல்கள் எழுத, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். ஏ.ஆர்.அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Tags : Prabhu Solomon ,
× RELATED முகக்கவசத்தை கழற்ற சொல்வதா? போட்டோகிராபர்களை கடிந்துகொண்ட நடிகை ஜான்வி