×

ரசிகர்களை கொண்டாடும் தமன்னா

தமிழில் மீண்டும் தனுஷ் ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதால், இந்தியில் ஒரு படத்திலும், தெலுங்கில் ஐந்து படங்களிலும் நடித்து வருகிறார் தமன்னா. கொரேனா தொற்றில் இருந்து மீண்டுள்ள அவருக்கு பழைய உடற்கட்டும், அழகும் திரும்ப வந்துவிட்டதாம். அதற்காக தினமும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும் அவர், தனது கிளாமரான போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதில் தெளிவாக செயல்படும் அவர் கூறுகையில், ‘வட இந்திய ரசிகர்களை விட, தென்னிந்திய ரசிகர்களுக்கு சினிமா என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. ரசிகர்களை நினைத்து நான் ஆச்சரியப்படும் விஷயம் இதுதான். 

தென்னிந்திய ரசிகர்களுக்கு தங்கள் கலாசாரத்தின் மிகச்சிறந்த ஒரு பகுதியாக சினிமா மாறியுள்ளது. முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ரசிகர்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகி விட்டனர். அதனால்தான் தென்னிந்திய மொழிகளில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறேன். நான் அதிகமான கமர்ஷியல் படங்களில் நடிக்க இதுவும் ஒரு காரணம்’ என்றார். 

Tags : Tamanna ,
× RELATED நோயால் அவதிப்படுகிறேன்: நடிகை தமன்னா உருக்கம்