×

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவு

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். முதலமைச்சர் உதவ வேண்டும், அவசரம் என இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. தற்போது சீனு ராமசாமி விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்தை இயக்கி வருகிறார். இதுவரை சீனு ராமசாமி இது குறித்து புகார் ஏதும் அளித்துள்ளாரா என போலீஸ் தரப்பில் கேட்டபோது இதுவரை எந்தவித புகாரும் அளிக்கவில்லை என பதில் அளித்துள்ளனர். தற்போது சீனு ராமசாமி ஏதேனும் ஆபத்தில் இருக்கிறாரா என கண்டறிவதற்காக போலீசார் சீனு ராமசாமி வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

அவர் போரூரில் வசித்து வருவதாக தெரியவந்திருக்கிறது. போரூரில் இருக்கும் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரிக்க சென்றுள்ளனர். என்ன காரணத்திற்காக இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார் என அவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.  அவரது செல்போன் எண் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக நேரடியாக முதல்வரிடம் அவர் உதவி கேட்டதிலிருந்து அவர் என்ன மாதிரியான ஆபத்தில் சிக்கி இருக்கிறார் என மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது.

Tags : Seenu Ramasamy ,
× RELATED தனது உயிருக்கு ஆபத்து: தமிழர்களுக்கு...