×

ஐதராபாத் வெள்ள நிவாரணத்துக்கு தெலுங்கு நடிகர்கள் நிதியுதவி

கடந்த வாரம் பெய்த கனமழையால் தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. ஏழை மக்கள் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கிறார்கள். வெள்ள நிவாரணத்துக்கு 550 கோடி ரூபாய் வேண்டும். திரைப்பட நட்சத்திரங்கள் தங்களால் இயன்ற அளவிற்கு நிதி தந்து உதவ வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதை ஏற்று நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளனர். என்.டி.பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர், நாகார்ஜுனா ஆகியோர் தலா ரூ.50 லட்சம் வழங்கினர். இவர்கள் தவிர விஜய் தேவரகொண்டா ரூ.10 லட்சமும், அனில் ரவிபுடி, ஹரிஷ் சங்கர், இயக்குனர் திரிவிக்ரம், ஆகியோர் தலா ரூ.5 லட்சமும் வழங்கியுள்ளனர்.

Tags : actors ,Hyderabad ,
× RELATED மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகல் நடிகை பார்வதி ராஜினாமா ஏற்பு