×

போதை பொருள் தயாரிப்பதே உங்கள் ஊர்தான்: கங்கனா மீது ஊர்மிளா தாக்கு

பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் பாலிவுட்டில் நிலவும் வாரிசு ஆதிக்கம், போதை பொருள் பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிராக பேசி வருகிறார். மும்பை மினி பாகிஸ்தான் என்றும் அங்கு ஆள்வது தலிபான்கள் என்றும் விமர்சித்தார். இதனால் மகாராஷ்டிரா மாநில அரசுக்கும், கங்கனாவுக்கும் மோதல் ஏற்பட்டது. தற்போது அவர் மும்பையை விட்டு வெளியேறி சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலிக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகை ஊர்மிளா, இது பற்றி கூறியிருப்பதாவது: போதை பொருள் பற்றி பேச கங்கனாவுக்கு எந்த தகுதியும் இல்லை. போதை பொருட்களின் பிறப்பிடமே அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசம்தான். அங்குதான் போதை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. முதலில் கங்கனா தனது சொந்த மாநிலத்தை சுத்தப்படுத்தி விட்டு அதன்பிறகு மும்பைக்கு வரட்டும். மும்பை அனைவருக்கும் சொந்தமான நகரம். மும்பைக்கு எதிராக கருத்து சொல்வது, இந்த நகர மக்களை அவமரியாதை செய்வதாகும். மும்பையின் மகளான என்னால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு ஊர்மிளா கூறினார்.

Tags : hometown ,Kangana ,Urmila attack ,
× RELATED அசாம் சாலை விபத்தில் இறந்த ராணுவ வீரர்...