×

அரை கோடி கேட்கும் நடிகைகள்

தற்போது தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடிப்பதற்கான நடிகைகளின்  எண்ணிக்கை குறைந்துவிட்டது. சாய் பல்லவியின் சம்பளம் பெரிய தொகை என்பதால்,  அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் திவ்யா, கயல் ஆனந்தி, ஐஸ்வர்யா  ராஜேஷ், பிரியா பவானி சங்கர், வாணி போஜன், இந்துஜா, அதுல்யா, மியா ஜார்ஜ்,  நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ் போன்ற நடிகைகளின்  கால்ஷீட்டுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சம்பந்தப்பட்ட நடிகைகள்,  தங்கள் மேனேஜர்களின் கட்டுப்பாடுகளை மீறி தங்கள் சம்பளத்தை கடுமையாக  உயர்த்திவிட்டதாக, புரொடக்‌ஷன் மேனேஜர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.  

இந்த நடிகைகளில் சிலர், 45 முதல் 65 லட்சம் வரை சம்பளம் கேட்கும்  லிஸ்ட்டில் இருக்கிறார்கள். எனவே, புதுப்படத்துக்கு ஒப்பந்தம் செய்யும்  விஷயத்தில் இவர்கள் உடனே நிராகரிக்கப்படுகிறார்கள். அடுத்த நிலையில்  இருக்கும் திவ்யா, கயல் ஆனந்தி போன்றோர், 45 முதல் 55 லட்சத்துக்குள்  சம்பளம் கேட்டு கறாராக இருப்பதால், அவர்களுக்கும் புதுப்படம் கிடைப்பதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர்  ஆகியோருக்கு மட்டுமே கைவசம் அதிக படங்கள் இருக்கிறது. 

Tags : listening actresses ,
× RELATED உலகிலேயே 2வது நாடாக இந்தியாவில் கொரோனா...