×

ஹீரோயின் ஆன குழந்தை நட்சத்திரம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு குழந்தைகளை மையமாக கொண்டு உருவாகும் படம் மங்கி டாங்கி. இதில் கன்னிமாடம் படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது ஜோடியாக பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரும், கடைசியாக மகளிர் மட்டும் படத்தில் இளம் வயது ஊர்வசியாக நடித்தவருமான வந்தனா நடிக்கிறார். மலையாள இயக்குனர் ஜீது ஜோசப்பின் உதவியாளர்கள் அபி ஆனந்த், சலீஸ் இயக்குகிறார்கள். “குழந்தைகளுடன் செல்லும் ஒரு காட்டுவழி பயணம்தான் படம். குழந்தைகளை வழிநடத்தும் மாஸ்டராக நான் நடிக்கிறேன்’’ என்கிறார் ஸ்ரீராம் கார்த்திக்.

Tags : Child star ,heroine ,
× RELATED ஹீரோயின் ஆகிறார் சாதனா