×

மாஸ்க், கையுறை இனி நிரந்தரமாகும்: மேக்னா நாயுடு

ஜாம்பவான்,  வைத்தீஸ்வரன், சரவணா, வாடா உள்பட பல படங்களில் நடித்துள்ளவர் மேக்னா நாயுடு. க, சிறுத்தை உட்பட சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக, யோகிபாபுவின் தர்மபிரபு படத்தில் நடித்திருந்தார். மேக்னா நாயுடு, போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் மிகியல் ரீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கணவருடன் துபாயில் வசித்து வருகிறார். அவர் கூறியிருப்பதாவது: இங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் முழுமையான லாக்டவுன் போல்தான் இருக்கிறது. மளிகை சாமான்கள் வாங்க மக்கள் மாஸ்க் அணிந்து செல்கிறார்கள். சமூக விலகலை சரியாகக் கடைபிடிக்கிறார்கள். கையுறைகளை அணிந்திருக்கிறார்கள். இது பழக்கமாகவே மாறிவிடும். லாக்டவுனுக்கு முன் வீட்டை விட்டு வெளியேற நாம் தயங்கியதில்லை. ஆனால், இப்போது மளிகை சாமான்கள் வாங்குவதற்கே நீண்ட யோசனை செய்ய வேண்டி இருக்கிறது. ஏனென்றால் அதிக நேரம், வெளியே இருக்க விரும்பவில்லை. வாழ்க்கை நிச்சயமற்றதாக இருப்பதால், வெளியே அலைவது பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு மேக்னா கூறியுள்ளார்.

Tags : Magna Naidu ,
× RELATED மாஸ்க் அணியாமல் ஊர் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்