×

கூண்டுகளில் இருந்து பறவைகளுக்கு விடுதலை: ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள்

தமிழ், தெலுங்கில் உருவான சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தவர் ஷ்ரத்தா கபூர். பாலிவுட் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பறவைகள் ஆர்வலரான ஷரத்தா கபூர், “கொரோனா ஊரடங்கால் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் கொடுமையை அனைவரும் அனுபவிக்கும் நிலையில் பறவைகளின் நிலை உணர்ந்து அவற்றுக்கு கூண்டில் இருந்து விடுதலை அளியுங்கள்” என்று கூறுகிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:ராஜஸ்தானில் உள்ள பாலி கிராமவாசிகள் விலங்குகளுக்காக   ஊரைச் சுற்றி நீர்த்தேக்கங்களை தோண்டிய செய்தியை படித்து மிகவும் மகிழ்ந்தேன்.

மனதைக் கவரும் அவர்களின் தன்னலமற்ற முயற்சிகளுக்கு நன்றி. கொரோனா ஊரடங்கில் அனைவரும் கூண்டில் இருப்பதை போன்று உணர்கிறோம். உங்கள் வீட்டு கூண்டில் இருக்கும் பறவை வாழ்நாள் முழுக்க இந்த துன்பத்தை அனுபவிப்பதை உணருங்கள். விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் நம்மைப் போன்ற உணர்வுகள் உள்ளன. அவற்றின் இயற்கையான வாழ்விடங்களிலிருந்தும், அன்பானவர்களிடமிருந்தும் பிரிக்கும்போது அவை மனச்சோர்வடைகின்றன. அவற்றின் சுதந்திரத்தை பறிக்க  நமக்கு என்ன உரிமை இருக்கிறது. அவற்றுக்கு விடுதலை அளியுங்கள் என்கிறார் ஷ்ரத்தா கபூர்.

Tags : Shraddha Kapoor ,
× RELATED தனியார் ரயில்கள் சேவை : வருகை,...