×

யாரும் யாரை நம்பியும் பிறக்கவில்லை; இயக்குனர் பா.ரஞ்சித் சுளீர்

மாறுபட்ட கதை அம்சத்துடன் உருவாகியிருக்கும் படம் நறுவி. ஒன் டே புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க  ராஜா முரளிதரன் இயக்குகிறார். கிறிஸ்டி இசை அமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித் பங்கேற்று பேசினார். அவர் கூறும்போது,’பாசிச வெறியுடன் இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப்படுத்தும் சூழ்நிலையில் நறுவி படத்தின் விழாவில் இருக்கிறோம்.

இப்பட இயக்குநர் போலத்தான் நானும் அட்டக்கத்தி விழாவில் பதற்றமாக இருந்தேன். நறுவி படம் பெறும் வெற்றி மூலமாக இங்குள்ளவர்கள் எல்லாம் பலமிக்கவர்களாக மாறுவார்கள் என நம்புகிறேன். படத்தை எடுப்பதை விட வெளியிடுவது தான் ரொம்ப கஷ்டம். அந்தத் தடைகளை தாண்டி இப்படம் வெற்றி அடைய வேண்டும். இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை.

அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும். இந்தப்படத்தில் உள்ள விஷுவல்ஸ் எல்லாம் நல்லாருக்கு.  தகுதியான படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை’ என்றார். இயக்குனர்கள் அதியன் ஆதிரை, ராஜா முரளிதரன், நடிகர் லிஜீஷ், இசை அமைப்பாளர் கிறிஸ்டி, தயாரிப்பாளர் துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : No one ,Ranjith Sulir ,
× RELATED தயவு செய்து கெஞ்சி கேட்கிறேன்... யாரும்...