×

மிரட்ட வருகிறது சைலன்ஸ்!

மாதவன், அனுஷ்கா நடிக்கும் படம் ‘சைலன்ஸ்’.  இந்தப் படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகியுள்ளது. முக்கிய வேடத்தில் அஞ்சலி நடிக்கிறார். ‘ஏ ஃபிளாட்’, ‘வஸ்தாடா நா ராஜு’ போன்ற தெலுங்குப் படங்களை இயக்கிய ஹேமந்த் மதுக்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அவரிடம் படத்தைப் பற்றி கேட்டோம்.

இந்தப் படத்தை அமெரிக்கவாழ் இந்தியர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ளேன். அங்கு நடைபெறும் ஒரு குற்ற சம்பவம், ஒவ்வொருவரின் வாழ்வையும் எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே படத்தின் கதைக்களம்.

வாய் பேசமுடியாத ஊமைப் பெண்ணாக, காது கேளாத செவிட்டுப் பெண்ணாக, பலரது மனதையும் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. முழுக்க முழுக்க அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் படமாக்கினோம். இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புதிய கோணத்தில் எதிர்பாராத சம்பவங்கள், திருப்பங்கள் என திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும்’’ என்கிறார்.

Tags :
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்