×

நெஞ்சோடு அணைத்த நமீதா

நடிகை நமீதாவின் கவர்ச்சியை ஆரம்ப கட்டத்தில் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அவரும் ரசிகர்களை மச்சான்ஸ் என்று உறவு முறை வைத்து அழைத்து நெருக்கம் காட்டினார். ஸ்லிம் தோற்றத்திலிருந்தவரை நமீதாவுக்கு பட வாய்ப்பும் நிறைய வந்தது. திடீரென்று வெயிட்போட்டதால் நமீதா மீதான மோகம் குறைந்தது. பட வாய்ப்புகளும் குறைந்தன. ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாத நிலை உருவானது. இதையடுத்து தனது காதலரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.

தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருந்தாலும் வாய்ப்புகள் எட்டாத தூரத்தில்தான் இருக்கிறது. நமீதாவின் கணவரும் நடிக்க முயன்று வருகிறார். இந்நிலையில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சி உடையில் கலந்துகொண்ட நமீதா அங்கிருந்த இளைஞர் ஒருவரை நெஞ்சோடு அணைத்து தூக்கி பின்னர் கீழே இறக்கிவிட்டார். இளைஞருக்கு கிடைத்த இந்த வாய்ப்பு எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்று நெட்டிஸன்கள் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர்.

Tags : Namitha ,
× RELATED டி.ஆருக்கு ஜோடி நமீதா!