×

தொடரும் பள்ளிக்காதல்

விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் அவர்களது இளவயது பாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் நடித்தனர். பள்ளி பருவ காதலர்களாக இருவரும் நடித்திருந்தனர். தற்போது இப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. விஜய்சேதுபதி வேடத்தில் சர்வானந்த், திரிஷா வேடத்தில் சமந்தா நடித்துள்ளனர். தமிழில் இப்படத்தை இயக்கிய பிரேம் குமார் தெலுங்கிலும் இயக்கி உள்ளார். சமந்தாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் தமிழில் நடித்த கவுரி கிஷனே நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஜானு படத்தை ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் இருவரும் இயக்குனருடன் இணைந்து பார்த்தனர். படத்தை பாராட்டி ஆதித்யா இணைய தள பக்கத்தில் மெசேஜ் வெளியிட்டார். அதைப்பார்த்த கவுரி,’ஆதிம்மா ஒவ்வொரு நாள் ஜானு படப்பிடிப்பின்போதும் படப்பிடிப்பு தளத்தில் உன்னை நினைத்து பார்க்காதே நாளே இல்லை என தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதைக்கண்ட ரசிகர்கள் 96 ஜோடிக்கு பள்ளி காதல் தொடர்கிறதா என ஜாலியாக தெரிவித்திருக்கின்றனர்.

Tags :
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்