தலைவி படத்தில் சசிகலாவாக பிரியாமணி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி பெயரில் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. சமீபத்தில் ஜெயலலிதா வேடத்தில் அவர் நடித்த டீஸர் வெளியானது.

ஜெயலலிதா தோற்றத்தில் கங்கனா ரனாவத்தின் தோற்றத்துக்கு விமர்சனமும் எழுந்தது. விப்ரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் பிரியாமணி சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Priyamani ,Sasikala ,
× RELATED தெலுங்கு அசுரனில் பிரியாமணி