×

இரட்டை இயக்குனர்களின் பேய் படம்

பராசக்தியில் கிருஷ்ணன் பஞ்சு தொடங்கி விக்ரம்வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி வரை இரட்டை இயக்குனர்கள வெற்றி கூட்டணியாக வலம் வருகின்றனர். அந்த வரிசையில்  வினோநாகராஜன், என்.கல்யாணசுந்தரம் இணைந்து இயக்கும் படம் டம்மி ஜோக்கர். இதுபற்றி  இயக்குனர்கள் கூறும்போது,’காணாமல்போன தந்தையை தேடி கிராமத்துக்கு  வரும் இளைஞன் பேய் பங்களாவுக்குள் செல்கிறான். அங்கு தங்க புதையல்  இருப்பதாக எண்ணி ஊர்மக்களும் செல்கின்றனர். திடீரென்று கதவு மூடிக்கொள்கிறது.

அதன் பிறகு நடப்பதை திகில் கலந்த நகைச்சுவையுடன்  படம் விளக்குகிறது. எஸ்.கே.ராமு ஹீரோவாக அறிமுகமாகிறார். நம்மகுமார்,  ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி, வைசாலி உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். ரேடியண்ட் விஷ்வல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆலன் பிரகாஷ்  இசை. திருப்பதி ஆர்.சாமி ஒளிப்பதிவு செய்கிறார். காரைக்குடியிலும் அதன்  சுற்றுபுற பகுதியிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது’ என்றனர்.

Tags : directors ,
× RELATED மலையாள டைரக்டர் ஜோஷியின் வீட்டில் ரூ.1 கோடி தங்க, வைர நகைகள் கொள்ளை