×

கோடிகளில் சம்பாத்தியம் காஜல் என்ன செய்கிறார்?

சமீபகாலமாக காஜல் அகர்வால், சமந்தா. ஸ்ரேயா, ரகுல் ப்ரீத், இலியானா என பெரும்பாலான நடிகைகள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் படங்களையும், வீடியோக் களையும் வெளியிட்டு வருகின்றனர். உடற்பயிற்சி செய்கிறோம் என்பதை சொல்லி ஊக்கப்படுத்தவா? அல்லது உடற்கட்டை ஸ்லிம்மாக வைத்திருக்கிறேன் என்று இயக்குனர்களுக்கு சொல்லவா என்பது புரியாத புதிர்தான். குறிப்பாக காஜல் அகர்வால் இதில் ரொம்பவும் ஆர்வம் காட்டுகிறார்.

காய்ச்சல் இருந்த நேரத்திலும் இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து காய்ச்சலை விரட்ட எனக்கு தெரிந்த வழி இதுதான் என கேப்ஷன் வெளியிட்டார்.
கோடிகளில் சம்பாதிக்கும் ஹீரோ அல்லது ஹீரோயின் கடற்கரை அருகே வீடு வாங்கி குடியேறுகின்றனர். ஆனால் காஜல் அகர்வால் மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பில் மிகவும் உயரத்தில் உள்ள வீட்டில் வசிக்கிறார். நேற்று தனது பால்கனி பகுதியில் ஸ்டைலாக நின்றபடி புகைப்படம் எடுத்து பகிர்ந்தார்.

காஜலுக்கு பின்னணியில் தரைப்பகுதியில் கட்டிடங்களாக காட்சி தருகின்றன. அவர் குடியிருக்கும் குடியிருப்பு ஏழைகள் மற்றும் நடுத்தர வர்கத்தினர் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. கோடிகளில் சம்பளம் வாங்கும் காஜல் அகர்வால் நினைத்தால் கடற்கரை ஓரத்தில் பங்களா வாங்கி குடியிருக்கலாம் ஆனால் அவர் இதுபோன்ற பகுதியில் வசிக்கும்போதே தனது சம்பளம் முழுவதையும் சேமித்துவைக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என திரையுலகினர் சிலர் தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED ஷாருக்கான் படத்தில் சல்மான்கான்