×

சரித்திர கதையில் இளவரசியாக அறிமுகமாகும் உலக அழகி

கடந்த 2017ம் ஆண்டு உலக அழகியாக தேர்வானவர் மனுஷி சில்லர். அரியானாவை சேர்ந்தவர். ஏற்கனவே இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை தவிர்த்து வந்தார். தற்போது புதிய படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இது அவர் அறிமுக படமாகும். துணிச்சலான மன்னர் என வரலாற்றில் புகழப்பெறும் பிரித்விராஜ் சவுஹானின் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட சரித்திர படமாக இது உருவாகிறது. இப்படத்துக்கு பிருத்விராஜ் என பெயரிடப்பட்டிருக்கிறது.

பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். இளவரசி சன்யோகிதா கதாபாத்திரத்தில் மனுஷி சில்லர் நடிக்கிறார். இப்படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்குகிறார். சில தினங்களுக்கு முன் பிருத்வி படத்தின் தொடக்க விழா பூஜையுடன் மும்பையில் நடந்தது. யஷ்ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்ய சோப்ரா தயாரிக்கிறார். இப்படத்துக்காக இளவரசியாக நடிக்கவிருக்கும் மனுஷி சில்லர் வாள் சண்டை மற்றும் வேறு சில பயிற்சிகள் பெற்று வருகிறார்.

Tags :
× RELATED விளையாட்டு கதையில் விஷ்ணு