×

ஹாலிவுட் படத்துக்கு குரல் கொடுத்த ஸ்ருதிஹாசன்

சூர்யாவுடன் 2 வருடத்துக்கு முன் சிங்கம் 3 (எஸ் 3) படத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன் அதன்பிறகு புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். 2 வருட  இடைவெளிக்கு பிறகு தற்போது  விஜய்சேதுபதியுடன் ‘லாபம்’  மற்றும் இந்தியில் உருவாகும் ‘பவர்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் டிம் கின்  இயக்கவுள்ள அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

இதற்கிடையில் வால்ட் டிஸ்னி தயாரித்திருக்கும் ப்ரோஸன் 2 படத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார் ஸ்ருதி. அனிமேஷன் படமான இது ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது.

ப்ரோஸன் படத்தின் முக்கிய கதாபாத்திரம் எல்சா. அந்த கதாபாத்திரத்துக்கு தமிழில் குரல் கொடுத்துள்ளார் ஸ்ருதிஹாசன். 3 பாடல்களும் பாடியிருக்கிறார். இப்படத்தை கிறிஸ் பக், ஜெனிஃபர் லீ இயக்கி உள்ளனர். தமிழில், ‘ப்ரோஸன் 2’விற்கு ஸ்ருதி டப்பிங் பேசியதுபோல் இந்தியில்  பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ரா, தெலுங்கில் நித்யா மேனன் குரல் கொடுத்திருக்கின்றனர்.

Tags : Shruti Haasan ,
× RELATED 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்'என்ற...