×

ஜெயலலிதா கதையில் நடிக்க தயங்கினேன் - நித்யா மேனன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை பலர் படமாக்கி வருகின்றனர். வெப்சீரிஸும் உருவாகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் நடிக்க தயங்கியதாக நித்யா மேனன் தெரிவித்துள்ளார். பிரியதர்ஷினி இயக்கத்தில் தி அயர்ன் லேடி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் படம் உருவாகிறது.

இதில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யாமேனன் நடிக்கிறார். இது பற்றி நித்யா மேனன் கூறும்போது, ‘இந்த படத்தில் நடிக்க கேட்டபோது, ஜெயலலிதா வாழ்க்கையை பலர் படமாக்குகிறார்கள். ஒரே சமயத்தில் இத்தனை படம் வந்தால் குழப்பம் ஏற்படாதா? ரசிகர்கள் இதை ஏற்பார்களா? என பிரியதர்ஷினியிடம் கேட்டேன்.

அதனால் நான் நடிக்கவும் தயங்கினேன். பிரியதர்ஷினி கூறும்போது எல்லா படமும் வரட்டும். இதில் எது நல்ல படமாக இருக்கும் என்பதை ரசிகர்களே முடிவு செய்யட்டும். எல்லாமே நல்ல படமாக அமைந்தால் அது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றார். அதுவும் சரி என தோன்றியது. பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டேன்’ என்றார்.

Tags : Jayalalithaa ,Nithya Menon ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...