×

காமெடி படத்துக்கு இசை அமைப்பது கடினம் ; விஷால் சந்திரசேகர்

இனம், அப்புச்சி கிராமம், குற்றம் 23, ஜில் ஜங் ஜக், ஜாக்பாட் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர், விஷால் சந்திரசேகர். அவர் கூறியதாவது:
எல்லா வகை படங்களுக்கும் இசை அமைத்துள்ள நான், காமெடி படம் என்றால் மட்டும் பயப்படுவேன். காரணம், காமெடி படங்களுக்கு இசை அமைப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. ஒவ்வொரு காமெடி நடிகருக்கும் தனி அடையாளம் தரக்கூடிய ஒலி உருவாக்க வேண்டும்.

முழு படத்தையும் ரசிகர்களுக்கு போரடிக்காமல் தரக்கூடிய  மிகப் பெரிய பொறுப்பு, இயக்குனருக்கு அடுத்து இசை அமைப்பாளருக்கு இருக்கிறது. எனக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு வருகிறது. முழுநேர நடிகராக மாறும் எண்ணம் தற்போது இல்லை. பரத் நடிக்கும் காளிதாஸ், அஞ்சலியுடன் யோகி பாபு நடிக்கும் படம், வைபவ் நடிக்கும் டாணா உள்பட பல படங்களுக்கு இசை அமைக்கிறேன்.

Tags : Vishal Chandrasekhar ,
× RELATED வாசிக்க மறந்த இசைக்கருவிகளால் வசிக்க...