×

பிகிலுக்கு அரசியல் நெருக்கடியா? தயாரிப்பாளர் பதில்

விஜய் நடித்துள்ள பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அட்லி இயக்கி உள்ளார். இப்படத்தின் டிெரய்லர் சமீபத்தில் வெளியானது. இது யூ டியூபில் ஷாருக்கானின் சாதனையை முறியடித்திருக்கிறது. முன்னதாக ஷாருக்கான் நடித்த ஜீரோ படம் 1.9 மில்லியன் லைக்குள் அதாவது 19 லட்சம் லைக்குள்  பெற்று முதலிடத்தில் இருந்தது. தற்போது பிகில் அதை கடந்த 2.1 மில்லியன் அதாவது 21 லட்சம் லைக்குள் பெற்றிருக்கின்றன.

இதை ரசிகர்கள் கொண் டாடி வருகின்றனர். பிகில் படத்துக்கு அரசியல் நெருக்கடி இருப்பதாகவும், ஷாருக்கானின் சக் தே படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி பிகில் படம் எடுக்கின்றனர் எனவும் தகவல் பரவியது. இதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, ‘சக் தே‘ படத்தின் ரீமேக் உரிமையை நாங்கள் வாங்கவில்லை.

அப்படி வந்த தகவல் வெறும் வதந்திதான். பிகில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கு வதில் எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை. நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம். இப்படத்துக்கு தணிக்கையில் யூ/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது.

Tags : Bigel ,crisis ,
× RELATED அன்று பருவமழை.... இன்று ஊரடங்கு... நடப்பு...