×

ஆண் நாய்க்காக டூயட் பாடிய யுவன் சங்கர் ராஜா

கில்லி என்ற பெயர் கொண்ட லாபர்டார் வகை நாயின் பார்வையில் இருந்து கதை சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள படம், அன்புள்ள கில்லி. இப்படத்துக்காக அரோல் கரோலி இசையில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இதுகுறித்து இயக்குனர் ஸ்ரீநாத் கூறுகையில், ‘ஆண் லாபர்டார் நாய்  ஒன்றுக்காக அவர் பாடியது குறிப்பிடத்தக்கது. ஆண் நாய், பெண் நாய் தோன்றும் இந்த டூயட் பாடலில் இடம்பெறும் காமெடி காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும். மைத்ரேயா, துஷாரா, வி.ஜே ஆஷிக், சாந்தினி, மைம் கோபி, நாஞ்சில் விஜயன், மவுன ராகம் கிருத்திகா நடித்துள்ளனர்’ என்றார்.

Tags : Yuvan Shankar Raja ,
× RELATED மே 1ம் தேதி மறு ரிலீசாகிறது மங்காத்தா