நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதிவ்யா

எஸ்.டி.விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய் ஆண்டனி, அல்லு சிரிஷ் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். தமிழில் அவர் கடைசியாக நடித்த படம், சங்கிலி புங்கிலி கதவ திற. கடந்த இரண்டு வருடங்களாக புதுப்படங்களில் நடிக்காமல் இருந்த அவர், தற்போது மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் படம் ரிலீசாகிறது. கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Tags : Srideviya ,hiatus ,
× RELATED 23 ஆண்டுகால பகையை மறந்து பரம எதிரிகளாக...